Pages

Thursday, August 2, 2012

உன் கண்கள் பேசுது என்னுடன்

கதைபேசும் விழிகள்
கண்கள் பேசும் என்பதை
மௌனமாக உன்னைப் பார்த்த போது 
உணர்ந்து கொண்டேன்
நிமிஷங்கள் வருஷங்களாக 
சில நொடிப்பார்வையில்
சிக்கித் தவித்த என் இதயத்தை
சிறைமீட்டுப் போனது 
வீதியோர ஜன்னல் காற்று
எங்குமில்லாத ஒரு அமைதியில்
உன்னிடம் அனுமதி கேட்காமலே 
பேசி விட்டேன் உன் இதயத்துடன்
காரணம் கூட தெரியாமல்
நானும் காதலித்தேன் உன் பார்வைகளை
கண்களிடம் அனுமதி கேட்டு
கடைசிவரை சேர்ந்திருக்க முயற்சித்தேன்
காரணம் தெரியாமல் யோசித்தேன்
இன்னும் எத்தனை தடவை தான்
உன் நினைவை நேசிப்பேன்
எனக்குள் நானே யாசிக்கிறேன்
பதில்கள் தெரியாமல் யோசிக்கின்றேன்......

Monday, July 2, 2012

நான் பார்த்த அழகிய கண்கள்

நான் பார்த்த அழகிய கண்கள் 
என்னைப்பார்த்து சிரித்த 
மௌனமான அந்த மொழிகள்
இன்றும் எனக்குள்
ஏதோ பேசிக்கொள்கின்றன
சத்தமில்லாமல் அவன் கண்கள்
நித்தம் என்னுடன் பேசிக்கொள்கின்றன
என்னையறியாமலே எனக்குள் தொலைத்த
அவன் பார்வையை தேடி 
எங்கோ தொலைந்து போனேன்
மறுபடியும் ஒரு பயணம் 
எனக்குள் நானே ஏற்படுத்திக்கொண்டேன்.
அவள் விழிக்குள் படுத்துறங்கி 
விளித்து நகர்ந்த அந்த நிமிடங்கள்
மீண்டும் எனக்குள் ஓர் கனவாய்
நினைவுகளும் அழகானவை என்பவை 
அவன் கண்கள் கொடுத்த ஞாபகம்
எனக்குள் சொல்லிக்கொண்டது